SARATH KUMAR S

வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் பட்டதாரி ஆவேன். வேலைவாய்ப்பு இல்லாததால் சுயதொழில் தொடங்க ஆலோசித்து சுயதொழில் தொடங்க என்னிடம் போதிய பொருளாதார வசதியில்லாததால் அரசு வழங்கும் மானியக் கடனில் சுயதொழில் தொடங்க எண்ணி கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி தென்காசி மாவட்ட தொழில் மையத்திலும், அக்டோபர் 16 ஆம் தேதி நான் கணக்கு வைத்துள்ள தங்களது வங்கியிலும் ஆலோசனை பெற்று அவர்கள் சம்மதத்துடன் (PMEGP) என்ற திட்டத்தில் 35% மானியத்துடன் ஆன்லைன் மற்றும் ஜெராக்ஸ் கடை வைப்பதற்கான மூலப்பொருட்கள் வாங்க 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி KVIC வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தேன், எனது (விண்ணப்ப எண்: DITN239266-11983135) ஆகும். விண்ணப்பித்த விண்ணப்பம் மற்றும் போதுமான ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பித்து நேர்முகத் தேர்விலும் கலந்துகொண்டேன். எனது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து மாவட்ட தொழில் மைய மேலாளர் எனக்கு PMEGP திட்டத்தில் 35% மானியத்துடன் கடன் வழங்க நான் கணக்கு வைத்துள்ள தங்களது வங்கிக்கு சிபாரி செய்து 2023 அக்டோபர் 27 அன்று ஆன்லைன் மூலமாகவும் மனுதாரராகிய எனக்கும், எனக்கு கடன் வழங்க சம்மதம் தெரிவித்த தங்களது வங்கிக்கும் அதற்குண்டான ஆணைக்கடிதத்தை அஞ்சல் வழியாக அனுப்பி வைத்தார்கள். ( இதற்குண்டான நகல் இத்துடன் இணைத்துள்ளேன்)



இந்தக் கடிதம் எனக்கு வரப்பெற்றவுடன் அதை எடுத்துக் கொண்டு மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பித்த ஆவணங்களுடன் தங்களது வங்கி மேலாளரை அனுகி அவரது ஆலோசனையின் பெயரில் கடன் வழங்கும் அதிகாரியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து PMEGP மானியக்கடன் திட்டத்தில் நான் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் மானியக்கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன், அவர்களும் எனது ஆவணங்களை பெற்றுக்கொண்டு விண்ணப்பத்தின் தகுதியின் அடிப்படையில் கள ஆய்வு செய்து கடன் தருகிறோம், ஆனால் தற்போது கடன் வழங்கும் பிரிவில் ஊழியர்கள் பற்றாக்குறையால் நான் மட்டும்தான் பணி செய்கிறேன், எனக்கும் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது கொஞ்சம் காலதாமதம் ஆகும் , பொறுத்திருங்கள் என்று உறுதியளித்தார்.

தங்களது வங்கியில் மனு கொடுத்து 1 மாதம் கடந்தும் வங்கி சார்பில் எனது மனுவிற்கு எவ்வித அடுத்தகட்ட நகர்வும் எடுக்காததால் நான் இரண்டு தினங்களுக்கு ஒருமுறை வங்கிக்குச் சென்று நான் கொடுத்த மனுவை நினைவுபடுத்தி விட்டு வந்துகொண்டே இருந்தேன். சுமார் 30 முறைக்கும் மேல் நான் கொடுத்த மனுவின் நிலையை அறிய வங்கிக்கு சென்றிருக்கிறேன்.

ஒருகட்டத்தில் கடந்த 2024 பிப்ரவரி மாதம் நான் தொழில் தொடங்க இருக்கும் கட்டிடத்தை தங்களது வங்கி சார்பில் நேரடியாக வந்து கள ஆய்வு செய்து நான் கொடுத்த விலைப்பட்டியலில் சில மாற்றம் செய்து 2024, மார்ச் 20 ஆம் தேதி நான் மூலப்பொருட்கள் வாங்க சிபாரிசு செய்த நிறுவனத்திற்கு எனது மூலதன பங்களிப்பு சேர்த்து 1,74,680 ரூபாய் கடன் தொகை கிடைத்து நான் அதன் மூலம் மூலப்பொருட்கள் வாங்கி தொழிலை தொடர்ந்தேன், மூலப்பொருட்கள் வாங்கிய பின்பும் தங்களது வங்கி சார்பில் கள ஆய்வு செய்து புகைப்படமும் எடுத்துச்சென்றீர்கள், அதன் தொடர்ச்சியாக வாங்கிய கடனுக்கு மாதம் தவறாமல் ரூபாய். 3845 தவனை கட்டி வந்தேன்.

இந்நிலையில் நான் வாங்கிய கடனுக்கு மானியத்தொகை வங்கிக்கு வரவில்லை என்று எனது மாதத் தவணையை ரூபாய்.330 உயர்த்தி ரூபாய். 4175 கட்டச் சொல்லி தங்களது வங்கி சார்பில் கூறினர் . நானும் அதனை கட்டி வருகிறேன்.. இந்நிலையில் எனது மானியத் தொகை 35% எனக்கு வந்து சேராததால் சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மையத்தில் 19-12-2024 அன்று நேரடியாக சென்று விசாரித்த போது மனுதாரராகிய நீங்கள் சமர்ப்பித்த மனு வங்கி சார்பில் 1-02-2024 அன்றே நிராகரிக்கப்பட்டதால் நாங்களும் நிராகரித்து விட்டோமே உங்களுக்கு எப்படி மானியம் தர முடியும்? என்று பதில் அளிக்க, எனது ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தகவலை எனக்கு தங்களது வங்கி சார்பிலும் கூறவில்லை, மாவட்ட தொழில் மையமும் தகவல் தெரிவிக்கவில்லை இதனால் அவர்களது பதில் எனக்கு பேரிடியாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

பின்னர் தங்களது வங்கி சார்பில் எனக்கு 1,74,680 (PMEGP) மானியக் கடன் திட்டத்தில் வழங்கப்பட்டு கடந்த 9 மாதங்களாக அதற்குண்டான தவணையை கட்டி வருகிறேன் என மாவட்ட தொழில் மையத்தில் ஆவணங்களை காட்டி விளக்கிய போது சம்பந்தப்பட்ட தங்களது வங்கி மேலாளரை அலைபேசியில் அழைத்து பேசினார்கள், வங்கி சார்பில் பேசிய தங்களது மேலாளர் நான் புதிதாக பொறுப்பேற்றுள்ளேன், சம்பந்தப்பட்ட நபருக்கு கடன் வழங்கிய மேலாளரும், கடன் வழங்கும் பிரிவு அதிகாரியும் பணிமாறுதல் பெற்று வேறு வங்கிக்கு சென்றுவிட்டார்கள் அவர்களிடம் விசாரித்து பதில் கூறுவதாக தாங்கள் பதில் அளித்துள்ளீர்கள்.

பின்பு மாவட்ட தொழில் மைய மேலாளர் மற்றும் அதிகாரிகள் என்னிடம் 15 நாட்கள் கழித்து வாருங்கள் நான் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் பேசிவிட்டு உங்களுக்கு அலைபேசியில் அழைத்து பதில் சொல்கிறேன் என சொல்லிவிட்டார்கள். ஆனால் 18 நாட்கள் ஆகியும் எந்த அழைப்பும் எனக்கு வராததால் 07-12-2024 அன்று மீண்டும் மாவட்ட தொழில் மையத்திற்கு சென்று கேட்டபோது நீங்கள் விண்ணப்பித்த (PMEGP) மானியக் கடன் திட்டம் வங்கி சார்பில் முதலாவதாக நிராகரிக்கப்பட்டதால் நாங்களும் அதை நிராகரித்து விட்டோம், பின்பு வங்கி சார்பில் நீங்கள் கையில் கொடுத்த ஆவணங்களையும், நாங்கள் அனுப்பிய ஆணைக்கடிதத்தையும் வைத்து அதே விண்ணப்பத்தை (MANUAL APPLICATION) பரீசிலித்து அதே திட்டத்தில் மாவட்ட தொழில் மையத்திற்கு தகவல் சொல்லாமல், விண்ணப்பதாரராகிய உங்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் கடன் வழங்கி, வங்கி சார்பில் PMEGP மானியக் கடன் திட்டத்தில் கடன் கொடுத்ததாக பதிவு செய்துள்ளனர். ஆனால் உங்கள் விண்ணப்பம் இணையத்தில் நிராகரிக்கப்பட்டதால் உங்களுக்கு அந்த திட்டத்தில் மானியம் கொடுக்க எங்களுக்கு அதிகாரமும், முகாந்திரமும் இல்லை என்று கூறினார்.

கடந்த 09-01-2025 அன்று தங்கள் வங்கி கடன் வழங்கும் அதிகாரியிடம் முறையிட்டதிற்கு கடிதம் எழுதி தருமாறு கேட்டதிற்கிணங்கி நானும் அனைத்து விபரங்களையும் கடிதம் மூலாமாக கொடுத்து வந்தேன், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை , மேல் அதிகாரி பார்வைக்கு அனுப்பியதாகவும் அங்கிருந்து பதில் வந்த பிறகு சொல்வாதாக கூறினார்.



நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வேலை வாய்ப்பு இல்லாததாலும், சுயமாக தொழில் தொடங்க போதுமான பொருளாதார வசதியின்றி இருப்பதாலும் அரசு வழங்கும் மானியக் கடன் திட்டத்தில் கடன் பெற்றால் ஓரளவு மானியம் பெற்று கடனை அடைத்து விடலாம் என்று நினைத்த எனக்கு தற்போது தங்களது வங்கியின் அலட்சிய நடவடிக்கையால் எனக்கு கிடைக்க வேண்டிய மானியத்தொகை கிடைக்காமல் கடனை கட்ட முடியாமல் மன வேதனையோடு, நிம்மதி இழந்து சிரமப்பட்டு வருகிறேன், எனவே மதிப்பிற்குரி வங்கி மேலாளராகிய தாங்கள் எனது நிலமையினை கருத்தில் கொண்டு நான் விண்ணப்பித்த மனுவின் அடிப்படையில் எனக்கு கிடைக்க வேண்டிய PMEGP கடன் மானியத்தொகையான 35%-ஐ வழங்கி நான் நீதிமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வு காணும் நிலைக்கு தாங்கள் வாய்ப்பளித்து விடமாட்டீர்கள் என்று நம்புகிறேன். எனவே இப்பிரசினைக்கு தாங்கள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வை ஏற்படுத்தி தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
Birthday
April 22
Location
puliyangudi
Back
Top